லஞ்சம் கொடுக்க முயன்ற இந்தோனீசிய ஆடவருக்குச் சிறை

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இந்தோனீசிய ஆடவருக்கு ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயது மார்சாரி இந்தோனீசியாவின் பாத்தாம் தீவிலிருந்து இம்மாதம் 14ஆம் தேதியன்று சிங்கப்பூருக்கு வந்ததாக லஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
அவர் கடவுச்சீட்டைத் திருத்தி சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றதற்காக தடுத்து வைக்கப்பட்டார். விசாரணை நடத்திய அதிகாரிகள் மார்சாரி குற்றம் புரிந்துவிட்டதாக அவரிடம் கூறினர். 
அதைக் கேட்ட மார்சாரி, தாம் வீடு திரும்ப விரும்புவதாகக் கூறி அதிகாரியிடம் லஞ்சப் பணமாக $170 கொடுக்க முயன்றார். லஞ்சப் பணத்தை ஏற்க மறுத்த அதிகாரி இதுகுறித்து புகார் செய்தார்.