ஆகாயப் படைத் தலைவராக  பிஜி கெல்வின் கோங் நியமனம்

சிங்கப்பூர் ஆகாயப் படைத் தலைவராகக் கூட்டுப்படை தலைமை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் கோங் பூன் லியோங் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 22ஆம் தேதியன்று அவர் அந்தப் பொறுப்பை ஏற்பார். 
ஆகாயப் படைத் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் மெர்வின் டான் வெய் மிங் விலகுகிறார். சிங்கப்பூர் ஆகாயப் படையின் தலைமைத்துவப் புதுப்பிப்பு முறையின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் நிகழ்வதாக தற்காப்பு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆகாயப் படைத் தவைலர் பதவியிலிருந்து விலகிய பிறகு மேஜர் ஜெனரல் டானின் திட்டங்கள் குறித்து அமைச்சு தகவல் தெரிவிக்கவில்லை. 46 வயது மேஜர் ஜெனரல் டான் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் ஆகாயப் படைக்குத் தலைமை தாங்கி வருகிறார். 43 வயது பிரிகேடியர் ஜெனரல் கோங் 1995ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படைகளில் இணைந்தார்.

2019-02-23 06:00 +0800