ராணுவத் தகவல் மையம் வாட்ஸ்அப் மூலம் கதைகள், கருத்துகள் பகிர்வு

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ராணுவ வீரர்களுடன் கதைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள ராணுவத் தகவல் மையம் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகிறது. ராணுவத் தகவல் மையத்துக்குக் கிடைக்கும் தேசிய சேவையாளர்கள் எழுதும் கதைகளும் கருத்துகளும் இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படுவதாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தற்காப்பு அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
ராணுவத் தகவல் மையம் சிங்கப்பூர் ராணுவத்தின் ஓர் அங்கமாகும். சமூக=அரசியல் இணையத்தளமான ‘தி ஆன்லைன் சிட்டிசன்’  ராணுவத் தகவல் மையம் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலைப் படம் எடுத்து இணையத்தில் பதி வேற்றம் செய்ததை அடுத்து, மையம் அனுப்பும் தகவல்கள் வாட்ஸ்அப்பில் வலம் வருவது பற்றி இம்மாதம் தெரியவந்தது. இது குறித்து இணையவாசிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்களில் பெரும்பாலானவை அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின்போது மாண்ட அலோய்‌ஷியஸ் பாங்கைப் பற்றியதாக இருந்தன.