டெங்கி, ஸிக்கா சம்பவங்களைக் குறைக்க உதவும் ஆண் கொசுக்கள்

நீ சூன் ஈஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் (இடக்கோடி), அவரது மகள் எல்லா இங், தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தலைவர் டான் மெங் டுயி ஆகியோர் முன்னிலையில் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (வலது) ஆகியோர் ‘வொல்பாக்யா-ஏடிஸ் எஜிப்டி’ நேற்று கொசுக்களை விடுவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆயிரக்கணக்கான ஆண் மலட்டு கொசுக்கள் நேற்றுக் காலை நீ சூன் ஈஸ்ட் தொகுதியில் விடுவிக் கப்பட்டன. இது டெங்கி, ஸிக்கா நோய் பரவலைத் தடுக்கும் தேசிய சுற்றுப்புற வாரிய ஆய்வின் ஒரு பகுதியாகும். 
‘புரோஜெக்ட் வொல்பாக்யா’ திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவ டிக்கையாக இது மேற்கொள்ளப்பட் டது. 
இதன் மூலம் டெங்கி, ஸிக்கா நோய்களைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசுக்களின் அளவை பெரிய பகுதிகளில் கட்டுப்படுத்த முடியுமா என்பது கண்டறியப்படும். என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
நீ சூன் ஈஸ்ட், தெம்பனிஸ் வெஸ்ட் தொகுதிகளில் இந்த நட வடிக்கை சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் நீ சூன் ஈஸ்ட் பகுதியில் 20% அள விலும் தெம்பனிஸ் வெஸ்ட் பகுதி யில் 50% அளவிலும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத் தைக் கடந்த மாதம் கட்டுப்படுத்த முடிந்தது.
‘வொல்பாக்யா-ஏடிஸ்’ கொசு யாரையும் கடிக்காது, நோயைப் பரப்பாது. ஆனால் அது ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும்.