2018ல் அதிகமான  மின்-சைக்கிள் விபத்துகள்

கடைத்தொகுதிகள், பேரங்காடிகள், வாகனங்கள், மின்சார சைக்கிள் கள் ஆகிவை தொடர்பான கூடு தல் தீச்சம்பவங்களை தீயணைப் பாளர்கள் எதிர்கொண்டார்கள்.
இருப்பினும், குப்பைத் தொட்டி, குப்பைக் குழாய் போன்ற குடியிருப் புப் பகுதிகளில் நிகழ்ந்த தீச்சம்ப வங்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டு காணாத சரிவைக் கண்டது என்று சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படை  தெரிவித் தது. சிஙகப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று அதன் வருடாந்திர புள்ளி விவரங்களை வெளியிட்டது.
கடந்த ஆண்டில் குடிமைத் தற்காப்புப் படைக்கு 3,885 அழைப் புகள் கிடைக்கப்பெற்றன. முந்தைய ஆண்டில் அந்த எண்ணிக்கை 3,871 என்று இருந்தது.
சிகரெட் துண்டுகள், எரிந்து கொண்டிருக்கும் இதர பொருட்க ளில் உள்ள தீ முழுமையாக அணைக்கப்படாமல் குப்பைத் தொட்டியில் போடப்பட்டன. 
இதுவே தீச்சம்பவங்கள் நிகழ்ந் ததற்கு முக்கிய காரணமாக இருந் தது. அனைத்து தீச்சம்பவங்களில் இதுவே பாதிக்கு மேற்பட்டவை
யாக இருந்தது. 

மின்-சைக்கிள், மின்-ஸ்கூட் டர் போன்ற தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்ப வங்கள் கடந்த ஆண்டில் அதிக ரித்தன. 
2017ஆம் ஆண்டில் அந்தத் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 49. கடந்த ஆண்டில் அந்த எண் ணிக்கை 74. 
இந்தத் தீச்சம்பவங்களில் பெரும்பாலானவை ‘லித்தியம் ஐயோன்’ மின்கலங்களால் ஏற்பட் டவை. 
அந்த மின்கலன்களில் மின் னேற்றம் செய்யும்போதும் மின்னேற் றத்துக்குப் பிறகும் தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த ஆண்டு தீச்சம்பவங்க ளில் அதிகமானோர் அதாவது 90 பேர் தீக்காயங்களால் காயமடைந் தனர். 2017ல் 60 பேருக்குக் காயம் ஏற்பட்டது.