மூத்த தலைமுறைக்கு உதவ முன்வரும் பல்கலைக்கழக மாணவர்கள்

மூத்தோர் மற்றும் அவரது பரா மரிப்பாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு ஆதரவு வழங்கும் தனது மாணவர்களுக்கு உதவ சிங்கப்பூர் சமூக அறிவியல் பல் கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) கடப்பாடு கொண்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று அப் பல்கலைக்கழகம் இரண்டு புரிந் துணர்வு ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டது. மக்கள் கழகத்தின் அங் மோ கியோ சமூக நிலையப் பிரிவு, ஸ்போர்ட் சிங்கப்பூர். சாங்கி பொது மருத்துவமனை, சிங் ஹெல்த் சமூக மருத்துவமனை ஆகியன இந்த ஒப்பந்தங்களில் இணைந்துள்ளன.
துடிப்புடன மூப்படைதல், பல தலைமுறைப் பிணைப்பு ஆகிய வற்றை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டவை இவை.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், பல்கலைக்கழகத்தின் மூப்பியல் துறை ஆசிரியர்களும் மாணவர் களும் அங் மோ கியோ சமூக நிலையத்திலுள்ள ActiveSG பயிற் சிக்கூடத்துடன் இணைந்து பணி யாற்றுவர். விளையாட்டு, உடல் நலன், கல்வி ஆகியன குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இது உதவும்.
தலைமுறைகளுக்கு இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வு மேற்கொள்ளவும் சாத்தியம் உள்ள தாக பல்கலைக்கழகம் தெரிவித்தது.

மக்கள் கழகம், ஸ்போர்ட் சிங்கப்பூர். சாங்கி பொது மருத்துவமனை, சிங் ஹெல்த் சமூக மருத்துவமனை ஆகியவற்றோடு சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திய நிகழ்வில் கலந்துகொண்டோர். படம்: SUSS.EDU.SG