போலிசுக்கு உதவிய ஏழு பேருக்கு பொது உணர்வு விருது

பொங்கோல் அக்கம்பக்க காவல் நிலையம் தனது அக்கம்பக்க கண்காணிப்பு நாளை நேற்று நடத்தியது. பிரதமர் அலுவலக அமைச்சரும் பாசிர் ரிஸ்=பொங் கோல் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான இங் சீ மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
குற்றங்களை எதிர்த்துப் போரிடுவதில் காவல் துறைக்கு உதவும் குடிமக்கள் சுற்றுக்காவல் உறுப்பினர்களை உள்ளடக்கிய சமூகத்தின் முயற்சிகளை அங்கீ கரிக்கும் நோக்கம் கொண்டது இந்த ‘அக்கம்பக்க கண்காணிப்பு நாள்’ நிகழ்வு.
மேலும், பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர் பாக சமூகத்துக்கு எடுத்துக் கூறும் ஒரு தளமாகவும் இந் நிகழ்வு அமைகிறது. நேற்றைய நிகழ்வில் ஏழு பேருக்கு பொது உணர்வு விருதுகளை காவல் துறை வழங்கியது.
விருது பெற்றவர்களில் ஒரு வரான சியூ பாய் ஓக் என்பவர் தமது அண்டை வீட்டுக்காரரின் வாகனத்தில் திருட்டு ஏற்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை யில் போலி-சுக்கு உதவினார். தமது காரில் இருந்த கண் காணிப்புக் கருவி எடுத்த படங் களை அவர் வழங்கினார். அச் செயலை பாராட்டும் விதமாக அவருக்கு விருது தரப்பட்டது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்