ரோச்சோர் கெனல் தீச்சம்பவத்தில் தீக்கு இரையான கார்

நேற்று முன்தினம் ரோச்சோர் கெனல் சாலை, சையது ஆல்வி சாலை சந்திப்பில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் ஒரு கார் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. காரின் இயந்திரப் பகுதியில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலிஸ் அதிகாரிகள் கார் ஓட்டுநரை வெகு நேரமாகத் தேடிக்கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த காரிலிருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறியது.