2018ல் மேலும் அதிகமான விலங்கு வதை புகார்கள்

விலங்கு வதை தொடர்பில் கடந்த ஆண்டு பொது மக்களிடமிருந்து கூடுதலான புகார்கள் கிடைக்கப் பெற்றன என்றும் பின்னர் அவை குறித்து நடத்தப்பட்ட விசாரணை யில் அவற்றில் 90 விழுக்காட்டு சம்பவங்கள் ‘விலங்கு வதை அற் றவை’ என்று வகைப்படுத்தப்பட் டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்
ளது.
அவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு நவம்பரில் ஈசூனில் நடந்த சம்பவம். அதில் ஒரு பூனை அதன் இடது பின்னங்காலில் துளையிட்ட காயத்துடன் மாண்டு கிடந்தது. 
பின்னர் அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் அது தெரு நாய்களால் தாக்குண்டு மாண்டது என்றும் மனிதர்களால் சித்திர வதை செய்யப்பட்டு இறக்கவில்லை என்றும் தெரிய வந்தது.
“விலங்கு நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதி கரித்திருப்பதால் விலங்கு வதை என நினைக்கும் புகார்கள் அதிக மாக வந்திருக்கலாம். மேலும் விலங்கு வதை பற்றி தெரிந்தால் அது பற்றி உடனடியாக சம்பந்தப் பட்ட அமைப்புகளிடம் தெரிவிக்க வேண்டும் என்ற பெருந்தன்மையும் அதற்குக் காரணமாக இருக்க லாம்,” என்று கடந்த வெள்ளிக் கிழமை குறிப்பிட்ட வேளாண் -உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் (ஏவிஏ) பேச்சாளர், விலங்கு வதை பற்றிய அனைத்து புகார்களும் விசாரணைக்கு உட் படுத்தப்படும் என்றார்.

புகார் கிடைக்கப் பெற்றதும் ஏவிஏ அதிகாரிகள், விலங்கு வதை நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்தைக் கண்காணித்தல், சம்ப வத்தை நேரில் பார்த்தவர்களிடம் நேர்காணுதல், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சி களைத் தேடுதல் போன்றவற்றைப் புலனாய்வில் பயன்படுத்துவர். 
தேவை ஏற்பட்டால் ‘ஏவிஏ’, விலங்கு வதை தடுப்புச் சங்கம் போன்ற விலங்கு நல்வாழ்வுக் குழுக்களுடனும் இதர அமைப்புக ளுடனும் இணைந்து பணியாற்றும்.
கடந்த ஆண்டில் விலங்கு வதை தொடர்பான 409 புகார்கள் ‘ஏவிஏ’க்குக் கிடைத்தன. அது கடந்த மூன்று ஆண்டுகளில் ஆக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
2017ஆம் ஆண்டில் 377 புகார் களும் 2016ஆம் ஆண்டில் 323 புகார்களும் கிடைத்தன. 
கடந்த ஆண்டு கிடைத்த புகார்களை விசாரிக்கையில் அவற் றில் 90 விழுக்காட்டு புகார்கள் ‘விலங்கு வதை அற்றவை’ என்று வகைப்படுத்தப்பட்டன. 2017ம் ஆண்டில் அந்த ‘விலங்கு வதை அற்ற’ புகார்களின் எண்ணிக்கை 92 விழுக்காடாக இருந்தது.2016ல் ‘விலங்கு வதை அற்ற’ புகார்கள் 78 விழுக்காடாக இருந்தது.கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற புகார்களில் நான்கு விழுக் காட்டு புகார்கள்தான் விலங்கு வதை என்று வகைப்படுத்தப்பட்
டன. மேலும் ஆறு சம்பவங்களின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது