நீர்த்தேக்கத்தில் சிக்கிய 1.7 மீட்டர் முதலை 

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் 1.7 மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்றை அதிகாரிகள் நேற்று முன்தினம் பிடித்தனர். 
தேசிய பூங்காக் கழகத்தின் உதவியுடன் பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) அதிகாலை 3 மணி யளவில் முதலையைப் பிடித்ததாக அதன் ஃபேஸ்புக் பகிர்வில் தெரிவித்தது.
அத்துடன் பொதுமக்கள் பாது காப்பு கருதிக் கூடுதல் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அடுத்த ஒரு வாரத்திற்கு நீர்த்தேக்கத்தில் முதலைகள் தென்படும் சம்பவங் களை இரு கழகங்களும் கண் காணித்து வரும். இம்மாதம் 14ஆம் தேதியன்று இதே நீர்த்தேக் கத்தில் முதலை ஒன்று தென்பட் டதைத் தொடர்ந்து இரு நிறுவனங் களையும் சேர்ந்த அதிகாரிகள் தினமும் வளாகத்தைச் சுற்றி வந்து கண்காணித்ததாக ‘பியுபி’ கூறியது. இப்போது சிக்கியுள்ள இம்முதலைதான் இரு வாரங் களுக்கு முன் தென்பட்ட முதலை என்பது அறியப்படவில்லை. 
அதிகாரிகளிடம் சிக்கிய இந்த முதலைவகை கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது என்று கூறப்படுகிறது. அந்த முதலை வனப்பகுதியில் விடுவிக் கப்பட்டுவிட்டது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்