குறைந்தகால குத்தகை வீடே மூத்தோர் விருப்பம்

சிங்கப்பூரில் ஈரறை நீக்குப்போக்கு வீடுகளை வாங்கும் மூத்தோரில் 10 பேரில் ஒன்பது பேர் குறைந்த கால  குத்தகையுடன் கூடிய வீடுகளையே விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. 
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இவ் வாறு தெரிவித்து இருக்கிறது. அத் தகைய வீடுகளுக்கு இன்னாள் வரை முன்பதிவு செய்துள்ள 16,169 பேரில் 54 விழுக்காட்டினருக்கு வயது 55 மற்றும் அதற்கும் அதிகம் என்றும் கழகம் தெரி வித்துள்ளது. 
ஈரறை நீக்குப்போக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு வாங்கும் 55 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோர் 15 முதல் 45 ஆண்டுகள் வரை குத்தகைக் காலத்தைக் கொண்டுள்ள வீட்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 
இந்தத் திட்டம் 2015 நவம்பரில் தொடங்கப்பட்டது. இதன் கீழ் வீடு களுக்கு முன்பதிவு செய்துள்ள மற்றவர் களில் குடும்பங்கள் மற்றும் ஒற்றையர் அடங்குவர். 
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஆகப் புதிய விற்பனையில் 5,000க்கும் மேற்பட்ட அரசாங்க அடுக்குமாடி வீடு கள் கொடுக்கப்படுகின்றன. அத்தகைய வீடுகளுக்கு விண்ணப்பித்த 8,700 மூத்தோர்களில் 91% அதாவது 7,959 பேர் குறைந்த குத்தகைக் காலத்துடன் கூடிய வீடுகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
2,545 பேர் 40 ஆண்டுகால குத்தகை வீடுகளையே விரும்புகிறார்கள் என்று கழகம் தெரிவித்து இருக்கிறது. 
35 ஆண்டுகால குத்தகையுடன் கூடிய வீடுகளை விரும்பியவர்கள் 2,154 பேர் என்றும் 1,344 பேர் 30 ஆண்டுகால குத்தகையை விரும்பு கிறார்கள் என்றும் கழகம் தெரிவித்தது. 15 ஆண்டுகால குத்தகையுடன் கூடிய வீடுகளை தேர்ந்தெடுத்தவர்கள் 139 பேர் என்றும் கழகம் குறிப்பிட்டது. 
இதனிடையே, காலாங் வாம்போ, தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகிய பகுதி களில் மேலும் ஈரறை நீக்குப்போக்கு வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்படும் என்றும் கழகம் தெரிவித்துள்ளது. இவை வரும் மே மாதம் கிடைக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்