மருத்துவ விடுப்பில் டாக்டர் கோ பூன் வான்

போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கீழே விழுந்து தமது கையை உடைத்துக்கொண்டதைத் தொடர்ந்து அவர் நீண்ட மருத்துவ விடுப்பில் இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

திரு கோ, 66, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தற்காலிக போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்பார் என்று பிரதமர் அலுவலகம் கூறியது. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பேச்சுவாரத்தையில் திரு கோவுக்குப் பதிலாக டாக்டர் விவியன் பங்குபெறுவார்.