பாராமரிப்புக்காக மூடப்பட்ட  ஹாவ் பார் வில்லா திறக்கப்படுகிறது

PHOTO: ST FILE

பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து மூடப்பட்டிருந்த ஹாவ் பார் வில்லா அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்படுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அதனைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு கட்டணம் கிடையாது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அந்த சுற்றுலாத் தளம் மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ‘டைகர் பாம் கார்டன்ஸ்’ எனவும் அழைக்கப்படும் ஹாவ் பார் வில்லா 1937ஆம் ஆண்டு டைகர் பாம் நிறுவனத் தலைவர் ஆவ் பூன் ஹாவ் என்பவரால் அவரது இளைய சகோதரர் ஆவ் பூன் பார் என்பவருக்காகக் கட்டப்பட்டது.