இவ்வாண்டில் பணவீக்கம் குறையும் என முன்னுரைப்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதையடுத்து, இந்த ஆண்டுக்கான பணவீக்கம் குறை வாக இருக்கும் என அரசாங்கம் முன்னுரைத்துள்ளது. பயனீட்டா ளர் விலைக் குறியீடு கடந்த மாதம் மட்டுப்பட்டிருந்ததாக அண் மையில் வெளியான மாதாந்திர அடிப்படையிலான தகவல் தெரிவிக்கிறது.
அண்மைய மாதங்களில் கச்சா எண்ணெய்யின் விலை கிடுகிடு வென சரிந்திருப்பதையடுத்து, சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் துறை அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பணவீக்கம் இந்த ஆண்டில் 0.5%, 1.5% குறையும் என்று முன்னுரைத்துள்ளன. இந்த ஆண்டின் பணவீக்கம் முறையே 1%, 2%ஆக இருக்கும் என முறையே  சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் துறை அமைச்சும் முன்பு முன்னுரைத்திருந்தன.
தங்கும் செலவு, தனியார் போக்குவரத்து செலவு ஆகியவற் றைக் கணக்கில் கொள்ளாத மைய பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காடாக இருக்கும் என்றும்  அதில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு, மின்சாரம், சில்லறை விற்பனைத் துறைகளைப் பொறுத்தவரையில் சந்தையில் போட்டி நிலவுவதால் ஒட்டுமொத்த விலைகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயராது என்று நேற்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஓராண்டுக்கு முந்தைய நில வரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாத பணவீக்கம் 0.4% குறைந் துள்ளது. 
கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் 0.5% குறைந்துள்ளது.
மின்சாரம், எரிவாயு ஆகிய வற்றின் விலை அதிகரிப்பு வேகம் தணிந்திருப்பதை இது காட்டுகிறது எனவும் அறிக்கை குறிப்பிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்