‘ஊழியர் திறன் மேம்பாட்டுக்கு வளங்களை செலவிட வேண்டும்’

விமானத்தின் இயந்திரப் பகுதி யைக் குளிர்விக்கும் காற்றாடியின் சிதைந்துபோன மேல்பூச்சை கையால் நீக்குவதற்கு பொதுவாக இரண்டு நாட்கள் பிடிக்கும். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் முதல் அத்தகைய பணிகளுக்கு இயந்திர மனிதனின் உதவியை எஸ்டி எஞ்சினியரிங் ஏரோஸ்பேஸ் நிறுவனம் நாடுவதால் அந்தப் பணியை ஒரே நாளிலேயே முடித்துவிட முடிகிறது.
இதுபோன்ற தானியக்க முயற்சிகள், எதிர்காலப் பணி களுக்குத் தேவையான திறன் களை ஊழியர்களுக்கு வழங்கு வதற்காக அந்த நிறுவனம் அமைத்திருக்கும் பயிற்சி மன்றம் ஆகியவற்றின் மூலம் அந்த நிறுவனம் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரிவித்தார்.

“நிறுவனத்துக்குள்ளேயே பயிற்சி மன்றம் அமைத்திருக்கும் சில சிங்கப்பூர் நிறுவனங்களில் எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனமும் ஒன்று. அதன் பயிற்சி மன்றம் தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் (என்டியுசி) அணுக்கமாகச் செயல் படுவதுடன் அதன் ஊழியர்களின் பயிற்சியையும் கவனித்து வருகி றது,” என்று திரு ஹெங், ஏர்போர்ட் ரோட்டில் இருக்கும் அந்த நிறுவனத்தின் விமானத் தளத்தைப் பார்வையிட்டதற் கிடையே தெரிவித்தார்.
“நமது ஊழியர்களின் திறன் களை மேம்படுத்துவதற்காக நேரம், கவனம், வளங்களைச் செலவிடு வது முக்கியம். அதிக எண்ணிக் கையிலான நிறுவனங்கள் இது போன்ற பயிற்சி நிலையங்களை அமைக்கும்,” என நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
அண்மையில் அவர் வெளியிட்ட வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் $4.6 பில்லியனை அடுத்த மூன்றாண்டுகளுக்கு வர்த்தகங்க ளின் மேம்பாட்டுக்கும், பணியில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிக்கவும் ஒதுக்கியிருப் பது குறிப்பிடத்தக்கது.