முன்னாள் சிறைக் கைதிகளுக்கு மேற்பார்வை உதவுகிறது

மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும் முன்னாள் சிறைக் கைதிகள் அதிக பயன் அடைவதாக அண்மை தகவல்கள் கூறுகின்றன. ‘சிபிபி’ எனப்படும் சமூகம் சார்ந்த திட்டத்தில் (Community-Based Programme) இடம்பெறும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகம். தங்களது சிறைத்தண்டனையின் அந்திமத்தை சிபிபி-யில் கழித்த கைதிகளின் எண்ணிக்கை கடந்தாண்டில் 1,098ஆக இருந்தது. இது, 2017ஆம் ஆண்டைவிட 15.4 விழுக்காடு அதிகம்.

திட்டத்தின்படி, கைதிகள் வீட்டுக்காவலில், இடைநிலை இல்லங்களில் (halfway houses) அல்லது வேலை விடுவிப்புத் திட்டத்தில் (Work Release Scheme) இருப்பர். உரிய நேரத்திற்குள் அவர்கள் சிறை அதிகாரிகளிடம் சென்று தங்களது நடவடிக்கைகளைப் பற்றி விளக்கவேண்டும்.

இந்தத் திட்டம் தனது சுயக்கட்டுப்பாட்டை மேம்படுத்தியுள்ளதாக வேலை விடுவிப்புத் திட்டத்தில் இருக்கும் 48 வயது திரு அகமது (உண்மை பெயர் அல்ல) தெரிவித்ததாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் கூறியது. நான்கு முறை சிறை சென்றுள்ள திரு அகமது, இந்தத் திட்டம் தனக்கு நல்ல பயன்களைத் தந்துள்ளதாகக் கூறினார். 

இதற்கு முன்னர் தான் அடிக்கடி வேலை மாறியதாகவும் நினைத்தபோதெல்லாம் வேலைக்குச் செல்லாமல் இருந்ததாகவும் திரு அகமது கூறினார். ஆனால், சிறை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் தனது நேர நிர்வாகத் திறன் கூடியுள்ளதாக திரு அகமது தெரிவித்தார். மேலும், எவை தனது தேவைகள், எவை ஆசைகள் என்று பகுத்தாராயும் தன்மை இந்தத் திட்டத்தால் மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’