இரண்டு சுகாதார பொருட்களுக்கு எதிராக எச்சரிக்கை

சுகாதார அறிவியல் ஆணையம் இரண்டு சுகாதார பொருட்களுக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. ‘ஹிக்கல்’, ‘சாலமன் ஐலந்து சொலோகோ ட்ரெடி‌ஷினல் கேண்டி’ ஆகியவை அந்தப் பொருட்கள்.

இந்த மருந்துப் பொருட்களுக்குள் ‘தடலாஃபில்’  என்ற ரசாயன மூலப்பொருள் அதிக அளவு இருப்பதாகச்  சுகாதார அறிவியல் ஆணையம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உரிய மருத்துவ மேற்பார்வை இன்றி தடலாஃபில்லை உட்கொள்வது ஆபத்தானது. இதனை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவோருக்கு பக்கவாதம், இதயச் செயலிழப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இந்த இரண்டு பொருட்களின் விற்பனையை அனைத்துக் கடைகளும் நிறுத்தியாகவேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.