சாங்கி பொது மருத்துவமனையின் கவனக்குறைவால் மூளை வரை பரவிய புற்றுநோய்: நீதிமன்றம் சாடல்

நோயாளி ஒருவர் புற்றுநோயால் பாதிக் கப்பட்டிருந்ததை சாங்கி பொது மருத் துவமனை தாமதமாகக் கண்டறிந்தது தெரியவந்துள்ளது.
நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப கட் டத்திலேயே கண்டறியாமல் அம்மருத் துவமனை கவனக்குறைவாக இருந்து விட்டதால் அது நிணநீர் முடிச்சு வரை பரவ அனுமதித்துவிட்டதாகக் கூறப்படு கிறது.
திருவாட்டி நூர் அஸ்லின் அப்துல் ரஹ்மான், 39, என்ற அந்தப் பெண் மணிக்கு புற்றுநோய் இப்போது நான் காம் நிலையை எட்டி, மூளை வரை  பரவிவிட்டது.
முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந் தால் நுரையீரல் புற்றுநோய் 2A நிலை யைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை எனக் கருதுவதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.
மருத்துவமனையும் அதன் மருத்து வர்களில் மூவரும் கவனக்குறைவாக இருந்ததால்தான் தனக்கு நோய் முற்றி விட்டதாக திருவாட்டி நூர் தொடர்ந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வராததால் அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில், அம்மூவரில் இரு மருத்துவர்களை நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது. அதே நேரத்தில், மருத்துவமனையும் 2007ல் திருவாட்டி நூருக்குச் சிகிச்சையளித்த மருத்துவ நிபுணரும் கவனக்குறைவாகச் செயல் பட்டதை நீதிமன்றம் கண்டுபிடித்தது.
தொற்றுப் பாதிப்பில் இருந்து திருவாட்டி நூர் முழுமையாகக் குணம் அடைந்துவிட்டார் எனத் தாம் உறுதி செய்யாத நிலையில் சுவாச நிபுணரான டாக்டர் இம்ரான் முகம்மது நூர் அவரை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அனுமதித்திருக்கக்கூடாது என்றும் மாறாக, மருத்துவ ஆலோ சனைக்காகத் தம்மை மீண்டும் வந்து பார்க்க நேரம் ஒதுக்கியிருக்க வேண் டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
திருவாட்டி நூர் 2007, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் பல முறை சாங்கி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றதாகக் கூறப்பட்டது.