பணி ஓய்வு, மறு வேலை நியமன  வயது வரம்புகளை உயர்த்த ஆலோசனை

பணி ஓய்வுக்கான வயதையும் மறு வேலை நியமனத்துக்கான வயதையும் உயர்த்துவது குறித்து நேற்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அரசு துரைசாமி (படம்) பேசினார். இவ்வாறு உயர்த்துவதால் மூத்த ஊழியர்கள் வேலையில் நீடித்து இருக்க உதவலாம். 
 பணி ஓய்வுக்கான வயதை 62லிருந்து 65ஆக உயர்த்தவும் மறு வேலை நியமனத்துக்கான வயதை 67லிருந்து 70ஆக உயர்த்தவும் ஆலோசிக்குமாறு நாடாளுமன்றத்தில் கூறினார். தாங்கள் நிரந்தரமாகப் பணி ஓய்வு பெறத் தயாரில்லை என்று பல மூத்த ஊழியர்கள் பகிர்ந்துகொண்டதாக என்டியுசியின் மத்தியக் குழுவின் உறுப்பினரான திரு அரசு குறிப்பிட்டார். குடும்பத்திற்கு ஆதரவு தரவும் சுகாதாரப் பராமரிப்புக்கும் ஓய்வுக்காலத்திற்கும் தேவையான நிதியைச் சேமிக்கவும் இவர்களுக்குத் தொடர்ந்து வேலை செய்ய விருப்பம் உள்ளது. அத்துடன் உடல் ஆரோக்கியமாக உள்ள நிலையில் தொடர்ந்து வேலையில் இருக்க மூத்த ஊழியர்கள் ஆசைப்படுவதாகவும் திரு அரசு விவரித்தார்.