‘வேலைக்கு அமர்த்தும்போது கட்டுப்பாடுகள் இருக்கின்றன’

ஊழியர்களை வேலைக்கு நியமிக்கும்போது அவர்கள் தகுதியுடையவர்களா என்பதைக் கண்டறிவது அவசியம் என்றாலும் அதில் யதார்த்தமான கட்டுப்பாடுகள் உள்ளன. 
பிரச்சினை தரக்கூடிய தனி நபர்களைக் கண்டுபிடிக்கும் அள வுக்கு முழு ஆற்றல் எந்த அமைப்பிடமும் இல்லை. இவ்வாறு மனிதவள, கல்வி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அமெரிக்கரான மிக்கி ஃபரேரா புரோச்செசை வேலையில் அமர்த்தும்போது அவர் தகுதி குறித்து தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் நன்கு ஆராய்ந்தனவா என்று அங் மோ கியோ குழுத் தொகுதியின் டாக் டர் இந்தான் அசுரா மொக்தார் கேட்டிருந்த கேள்விக்கு திருவாட்டி லோ பதிலளித்தார்.

எச்ஐவி தகவல் கசிவு விவ காரத்தில் சம்பந்தப்பட்டிருந்த புரோச்செஸ், 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இரு பலதுறைத் தொழிற் கல்லூரிகளிலும் வேலை செய்வதற் கென போலி பல்கலைக்கழகச் சான்றிதழ்களைப் பயன்படுத்தியி ருந்தார். புரோச்செசை பணியில் அமர்த்துவதற்கு முன் இரு பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் அவரின் சான்றிதழ்களின் நகல் களைச் சரிபார்த்து அவரின் வேலைத் தகுதியை நிர்ணயித்தன.
இதுபோன்ற சோதனைகள் பொதுப் பிரிவிலும் தனியார் பிரி விலும் உள்ள நிறுவனங்கள் மேற் கொள்ளப்படும் சோதனைகளுக்கு ஒப்பானவை.
உளவியல் நிபுணர்களை உள் ளடக்கிய இரு பள்ளிகளின் நிர் வாக அதிகாரிகள், விரிவுரையாளர் வேலைக்காக புரோச்செசுடன் நடத்திய நேர்காணல்களின்போது அவர் உளவியல் துறை தொடர்பில் நிறைய அறிந்திருந்தார் என்றும் திருவாட்டி லோ கூறினார்.