வேறு அரசாங்கம் அதிகாரம் செய்ய அனுமதிக்கப்படாது

சிங்கப்பூர் கடற்பகுதி விவகாரம் குறித்து வேறு நாட்டு அரசாங்கம் அதிகாரம் செய்ய சிங்கப்பூர் அனு மதிக்காது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
இம்மாதம் 9ஆம் தேதியன்று பிற்பகல் 2.28 மணிக்கு துவாசுக்கு அப்பால் உள்ள சிங்கப்பூரின் கடற் பகுதியில் ‘போலாரிஸ்’ என்ற மலேசியக் கப்பல் மீது ‘பிராயஸ்’ எனும் கிரேக்கக் கப்பல் மோதியது தொடர்பில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் தெசேரா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விவியன் இவ்வாறு பதிலளித்தார்.
‘பிராயஸ்’ தனது அடுத்த துறைமுகமான ஜோகூரில் உள்ள தஞ்சோங் பெலபாசுக்குச் செல்ல சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டபோது மோதல் சம்பவம் நிகழ்ந்தது.
அனைத்துலக கடல்துறை அமைப்பின் விபத்து விசாரணை குறியீட்டின்படி, இம்மோதல் சம் பவத்தை ஒரு மோசமான கடல் துறை விபத்தாகக் கருதாததால் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அந்த கிரேக்கக் கப்பலை அடுத்த துறைமுகத்திற்
குச் செல்ல அனுமதித்தது என அமைச்சர் விளக்கினார்.
அத்துடன் கிரேக்கக் கப்பல் சிங்கப்பூர் கடற்பகுதியில் இருந் ததால் மலேசிய அரசாங்கம் அதைக் கைப்பற்றவில்லை என்றும் அவர் சொன்னார்.
மலேசியக் கடல்துறைக்குச் சொந்தமான ‘போலாரிஸ்’ எல் லைப்பகுதியையும் பாதுகாப்பு அபாயங்களையும் குறிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.