‘தேர்தல் சுழற்சிக்கும் மெர்டேக்கா திட்டத்திற்கும் தொடர்பு இல்லை’

தேர்தல் சுழற்சிக்கும் அரசாங்கம் அமல்படுத்தும் மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டங்களுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறுவது தவறு என்று வர்த்தக, தொழில், கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று கூறினார்.  
மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் நடைமுறைப் படுத்துவதும் அடுத்த பொதுத் தேர்தலும் ஒட்டி வருவதாகப் பொதுமக்களில் சிலர் சுட்டியது குறித்தும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கூறியிருந் ததற்கு திரு சீ இவ்வாறு பதிலளித்தார்.
அந்தந்த அரசாங்கத்தின் தவணையின்போதும் உபரிகள் அமைந்துவிடுவதாகவும் அவ்வாறு சேரும் பணத்தை இது போன்ற தொகுப்புத் திட்டங் களுக்காக பயன்படுத்துவதாக வும் திரு சீ விளக்கினார். 
ஆட்சிக்கு வந்த உடனே அரசாங்கம் இத்தகைய திட்டங் களைச் செயல்படுத்த முடியாது. ஏனெனில் உபரிகள் எவ்வளவு கிடைக்கும் என்றோ எவ்வளவு தொகையை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றோ அந்த அரசாங்கம் தொடக்கத்தில் அறிந்திருக்காது.

சிங்கப்பூரின் அமைப்புக்கு ஏற்ப நிதி விவேகத்திற்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் இது மிக முக்கியம் என்றார் திரு சீ.
“தற்போதைய தலைமுறையைப் பார்த்துக்கொள்வதுடன் இனி வரும் தலைமுறையினரையும் கருத்தில் கொண்டு நீண்ட காலத் திட்டங்களை நாம் வகுக்க வேண்டும்.
“இதைத்தான் ஒரு பொறுப் பான அரசாங்கம் செய்யவேண் டும். நம் கொள்கைகளும் திட் டங்களும் தற்போதைய தலை முறைக்கும் எதிர்காலத் தலை முறைகளுக்கும் நிதி நிலைத் தன்மை உடையவையாக இருக்க வேண்டும்,” என்றார் திரு சீ.   
மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் மூத்த குடி மக்களுக்கு அவர்களது மருத் துவச் செலவுகளில் உதவுவதாக பொதுமக்களிடமிருந்து கருத்து களைப் பெற்றிருப்பதாக விவாதத் தின்போது கூறினார் திரு சிங். 
ஆனால் மக்கள் செயல் கட்சி தேர்தல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் இந்தத் திட்டத் தைத் தேர்தல் சமயத்தில் அறி விப்பது போன்று உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்