தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் இதுவரையில்லாத அளவுக்கு உயர்வு

தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்ட 107,771 சம்பவங்கள் கடந்தாண்டு சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முந்தைய ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களின் எண்ணிக்கை 90,327ஆக இருந்தது.

கடந்தாண்டின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 300 சம்பவங்கள் கடந்தாண்டு நிகழ்ந்ததாக ஆணையம் கூறியது. சோதனைச் சாவடிகளின் கண்டுபிடிப்புகள் அதிகரித்தது இதற்குக் காரணம் என்றும் ஆணையம் தெரிவித்தது. 

“சோதனைகளும் தண்டனைகளும் கடுமையாக இருந்தபோதும் தடை செய்யப்பட்டுள்ள இத்தகைய பொருட்களைக் கள்ளத்தனமாகக் கொண்டுவர பலர் தொடர்ந்து முயல்கின்றனர்,” என்று ஆணையத்தின் ஆணையாளர் மார்வின் சிம் தெரிவித்தார்.