மானபங்கச் செயலில் ஈடுபட்ட ஆடவர்: 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு

மானபங்கச் செயலில் ஈடுபட்ட ஆடவர்: 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு

1 mins read
a21f130b-7b35-41b1-aa81-452ff422f8ee
-

2017ஆம் ஆண்டில் செந்தோசா கோவ்வில் நடந்த தனியார் விருந் தில் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய ஆண் மாடல் ஒருவ ருக்கு நேற்று 15 மாத நன்னடத் தைக் கண்காணிப்பு ஆணை பிறக்கப்பிக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த கோக்கர் கைல்ஸ் அதின்கும்னி ஜக்தீஷ் எனும் அந்த 21 வயது ஆடவர் தனது குற்றத்தைக் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். அந்த உத்தரவின்படி, அவர் நாள்தோறும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை வீட்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் அவர் 100 மணிநேரம் சமூகப் பணியாற்ற வேண் டும். ஜக்தீஷ் உத்தரவைக் கடைப் பிடிப்பதை உறுதிசெய்ய அவரது மாமா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு அவர் $5,000 பிணை செலுத்தியிருக்கிறார். கைல்ஸ் கோக்கர் என்று அழைக்கப்படும் ஜக்தீஷ் ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசி. அவரும் உள்ளூர் பாடகி தபிதா நோசரும் இணைந்து இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.