தந்தையை கத்தியால் தாக்கிய தனயன்

தான் கேட்ட $2,000ஐத் தர மறுத்த தந்தையைக் கத்தி யால் தாக்கியுள்ளார் மாணவ ரான அவரது மகன். அத னால் தந்தைக்கு பல்வேறு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன.
2016ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நடந்த இச்சம்ப வத்தில் பணம் தர மறுத்தார் தந்தை திரு லோய் ‌ஷியாங் சியான். அதனால் அவரைத் தாக்கினார் 19 வயது மகன் டைலன் லோய் ஸே„ங் ஹுவான். மகன் டைலன் 2016ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அதற்கான காரணம் தெரியவில்லை.