ஜோகூரின் தீச்சம்பவங்கள் அதிகரித்தால் சிங்கப்பூரில் புகை மூட்டம் ஏற்படலாம்

இந்த வாரத்தில் பொருட்கள் எரி யும் வாடை வீசுகிறது என்று சிங்கப்பூரர்கள் தெரிவித்த புகா ருக்கு ஜோகூரின் தென் பகுதியில் நிகழ்ந்த ஒரு தீச்சம்பவமே கார ணம் என்று நம்பப்படுகிறது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது.
இப்போது ஜோகூரில் தீக்குக் காரணமான இரண்டாவது இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சிங்கப்பூரிலிருந்து 50 கிலோ மீட்டர் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி என்று நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.
அங்கிருந்து வரும் புகை தற் போது வீசும் வடகிழக்கு பருவக் காற்றால் தென்மேற்கு திசையை நோக்கி வருகிறது என்றும் அதன் தொடர்பில் சிங்கப்பூரில் பல பகு திகளில் எரியும் வாடை வீசுகிறது என்று புகார்கள் கிடைத்தன என் றும் வாரியம் கூறியது.
ஜோகூரில் தீச்சம்பவங்கள் தொடர்ந்தால் அது சிங்கப்பூரில் புகைமூட்டத்தை ஏற்படுத்தக்
கூடும் என்றும் வாரியம் சொல்லிற்று.