2018ல் மிக அதிக அளவில் கள்ள சிகரெட்டுகள் 

சிங்கப்பூர் சோதனைச் சாவடி களில் கடந்த ஆண்டில் மிக அதிக அளவில் 107,771 கள்ள சிகரெட் சம்பவங்கள் நிகழ்ந்தன. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 19% அதிகம். 2017ல் இந்தச் சம்பவங்களின் எண் ணிக்கை 90,327.
இதுதான் ஆக அதிகமான வருடாந்திர எண்ணிக்கை என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில் கூறியது.
அப்படி என்றால் கடந்த ஆண் டில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 300 கள்ள சிகரெட் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தனது அமைப்பு கடந்த ஆண் டில் 212 மில்லியன் பயணிகளையும்  10 மில்லியன் சரக்குகள், கொள் கலன்கள், பொட்டலங்கள் ஆகிய வற்றையும் கையாண்டுள்ளன.
“கடுமையான சோதனைகள், அதிகரித்துள்ள தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும், கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கடத்திவரும் சம்பவங்கள் அதிக ரித்து வருகின்றன,” என்றார் குடி நுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் ஆணையாளர் மார்வின் சிம். 
இருப்பினும், சோதனைச் சாவ டிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தாலும் அதிகாரிகள் பாது காப்புச் சோதனைகளின் கடுமை யைக் குறைக்க மாட்டார்கள் என் றும் திரு சிம் சொன்னார்.
வருடாந்திர அறிக்கையின்படி, கள்ள சிகரெட்டுகளைக் கடத்த லாரிகள், கனரக வர்த்தக வாக னங்கள் போன்றவைதான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.