பெண்களுக்கான அங்கீகாரம் 

மனிதவள அமைச்சர் ஜோசஃ பின் டியோ. PHOTO: GOV.SG

இருநூற்றாண்டு நிறைவு போன சின் ஓர் அங்கமாக மத்திய சேமநிதிக் கணக்கில் நிரப்பப் படவுள்ள $1,000 தொகை, வீட்டில் இருந்து குடும்பங்களைப் பார்த்துக் கொண்ட பெண்களுக்கான அங்கீ காரம் என்று நேற்று நாடாளுமன்றத் தில் மனிதவள அமைச்சர் ஜோசஃ பின் டியோ கூறினார்.
பிறர் வேலைக்குச் சென்றபோது இப்பெண்கள் தங்கள் குடும்பங் களைக் கவனித்துக்கொண்டதற்கு அடையாளமாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
பணிஓய்வுக்குத் தேவைப்படும் பணத்தைச் சேமிக்க இவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த காலகட்டம் இருந்ததை அவர் சுட்டினார். 
வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும்போது ஆண், பெண் போன்ற பாகுபாட்டின் அடிப்படை யில் எந்த ஒரு முடிவையும் எடுக்காவிட்டாலும் ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டமும் குறிப்பிடத் தக்க வழிகளில் பெண்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் அமை யும் என்றார் அவர்.
சென்ற வாரம் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்.  
இதன்படி மத்திய சேமநிதிக் கணக்குகளில் குறைவான தொகையைக் கொண்டுள்ள 50 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப் பட்ட சிங்கப்பூரர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக அதிகபட்சம் $1,000 வரை அவர்களது மசே நிதிக் கணக்குகளில் அரசாங்கம் பணம் நிரப்பும்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி

அட்மிரல்டி பிளேஸ் கடைத் தொகுதியில் உள்ள தற்போதைய சந்தை உட்லண்ட்ஸ் ஈஸ்ட் அக்கம்பக்க போலிஸ் மையத்துக்குப் பக்கத்தில் உள்ள இடத்துக்கு மாறுவது பற்றிய தகவலை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் சுற்றறிக்கையில் தமிழுக்குப் பதிலாக தவறுதலாக இந்தி மொழி அச்சடிக்கப்பட்டு இருந்தது. படம்: விஜயா கந்தசாமி ஃபேஸ்புக்

24 Mar 2019

சுற்றறிக்கையில் தமிழ் என்று எண்ணி தவறுதலாக இந்தி மொழி