குழந்தை வளர்ப்புக்கான செலவுகள் குறைய மேலும் முயற்சி தேவை

குழந்தை வளர்ப்புக்கான செலவுகள் குறைய மேலும் முயற்சி தேவை

1 mins read
600a5bc7-6cdb-40a1-ac3d-e9cdde144add
ST PHOTO: KUA CHEE SIONG -

நாட்டில் குழந்தை வளர்ப்புக்கு ஆகும் செலவுகளில் அரசாங்கம் வழங்கும் கட்டணக் கழிவுகள் கூடுதலாக இருக்க வேண்டும் என்று மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதியின் ஓங் டெங் கூன் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். மூப்படையும் சமூகமும் குறைந்து வரும் பிறப்பு விகிதமும் நாட்டில் தொடர்ந்து நிலவும்போது, இந்தக் கட்டணக் கழிவுகள் தேவைப்படுவதாக அவர் சொன் னார். பாலர் பள்ளி கல்விக்கு $10 கட்டணம் செலுத்துவது, பிள்ளை மற்றும் குழந்தைப் பராமரிப்புச் சேவைகளுக்கான கட்டணக் கழிவுகளை அதிகரிப்பது, பள்ளிப் பேருந்துச் சேவைகளுக்குக் கட் டணக் கழிவு வழங்குவது, வேலை செய்யும் தாய்மார்களுக்குக் கூடு தல் ஆதரவு தருவது எனப் பல யோசனைகளை அவர் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள் ளையின் மதிப்பு என்ன என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டும். நாட்டின் வளங்களை அவர்களுக்கென முதலீடு செய்வது பயனுள்ளது என நாம் கருதுவோம் என்றார் அவர். இளம் தம்பதியினர் பலர் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செல வினத்தாலும் வேலைப் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையாலும் கடுமை யான நிதி நெருக்கடிக்கு ஆளா கின்றனர். இத்தகைய நெருக்கடி நிலை யில் குழந்தைகள் பெற்றுக்கொள் வதைத் தாமதிப்பதும் தவிர்ப்பதும் அறிவார்ந்த முடிவே என்றார். சிங்கப்பூரின் மொத்த பிறப்பு விகிதம் 2017ஆம் ஆண்டில் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.16ஆகக் குறைந்தது. இது இறப் போர் விகிதமான 2.1க்கும் குறைவு.