குறைந்த வருமான ஊழியர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்     

குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களின் வேலை தொடர்பான உணர்வுகளைச் சமுதாயம் மாற்ற முடியும் என்று பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியின் திரு சைனல் சப்பாரி (படம்) கூறினார்.  
துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், நிலவனப்பு ஊழியர்களுக்குப் பொதுமக்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்க முற்பட வேண்டும் என்று அவர் கோரினார். அத்துடன் அனைவருக்கும் தூய்மையான, பசுமையான, பாதுகாப்பான ஒரு சுற்றுச்சூழலை உருவாக்க இந்த ஊழியர்கள் ஆற்றும் பங்கையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்றார். 
வணக்கம் கூறுவது, குப்பை போடாமல் இருப்பது, சாப்பிட்ட தட்டைத் திரும்பக் கொடுப்பது எனச் சிறு சிறு செயல்கள் நாம் செய்யும்போது செலவே இல்லாமல் இந்தக் குறைந்த வருமான ஊழியர்களுக்கு மகிழ்வூட்டலாம் என்றார் திரு சைனல்.