அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்கு நெறிமுறைகள் குழு   

அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்கென உள்ள நெறிமுறைகளைக் கண்காணிப்பதற்கு தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று மரின் பரேட் குழுத்தொகுதியின் சியா கியன் பெங் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள், விஞ்ஞானிகள், தத்துவவாதிகள் எனப் பலதரப்பினரையும் கொண்டுள்ள இக்குழு, மனிதர்களின் மீதும் அவர்களின் உறவுகளின் மீதும் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பார்க்கும். 
பின்னர் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துக் குழு முடிவெடுக்கும். தொழில்நுட்பம் சார்ந்த சமுதாயமாக முடிவெடுக்கும்போது வேகமும் விவேகமும் மட்டுமல்லாமல் நன்மை, தீமை, சரி, தவறு என்றும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். அதற்கு இக்குழு உதவும்.