‘வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு விகிதத்தைக் குறைக்க வேண்டும்’ 

நாட்டின் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்தத் தவறினால் சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்காது என்றும் சமூக அரசியல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் நேற்று முன்தினம் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் நாடாளுமன்றத்தில் கூறினார்.
மற்ற நாடுகளில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாகவும் திரு சீ சுட்டினார். இதனால்தான் வெளி நாட்டு ஊழியர்களால் சில நிறுவனங்களில் பயன் இருந்தாலும் சேவைத் துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. 
அடுத்த இரு ஆண்டுகளில் சேவைத் துறையில் வேலைக்கு நியமிக்கும் ஒவ்வொரு முழுநேர உள்ளூர் ஊழியருக்கும் ஈடாக அமர்த்தக்கூடிய வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு விகிதத்தில் அதிகபட்ச வரம்பு விதிக்கப்படும். இது குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதற்கு திரு சீ பதிலளித்தார்.