சில்வியா லிம்: குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள் தங்கள்  தகுதிக்குக் குறைந்த வேலையில் இருக்கின்றனர் 

நாட்டில் குறைந்த கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் அவர்களின் தகுதியைவிடக் குறைந்த நிலை யிலுள்ள வேலையைப் பெறுவதாக மனிதவள அமைச்சின் அதிகார பூர்வத் தகவல்கள் தெரிவித்து உள்ளன. 
இதைத் தொடர்ந்து அரசாங்கம் இந்நிலையை மேம்படுத்த முயற்சி கள் எடுக்கவேண்டும் என்றும் சமுதாயத்தில் இதனால் ஏற்படக் கூடிய தாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும் நேற்று பாட் டாளிக் கட்சியின் தலைவர் சில் வியா லிம் கேட்டுக்கொண்டார்.
வெளியிடப்பட்ட புள்ளிவிவரங் கள்படி பல்கலைக்கழக பட்டதாரி களில் தகுதி குறைந்த வேலை களைப் பெற்றவர்களின் விகிதம் 2.3 விழுக்காடாக இருந்தது. இது ஒட்டுமொத்த விகிதமான 3.3 விழுக்காடைக் காட்டிலும் குறைவு.
ஆனால் உயர்நிலைக் கல்வி பெற்றவர்களில் குறைந்த வேலைத் தகுதி பெற்றவர் விகிதம் சற்று கூடுதலாக 4.4 விழுக்காட்டில் உள்ளது.
உயர்நிலைக் கல்வித் தகுதியும் இல்லாதோருக்கு இன்னும் சற்று அதிகரித்து 5 விழுக்காடாக உள்ளதென திருவாட்டி லிம் சுட்டினார்.