‘உயர்நிலைப் பள்ளிகளில் தரம் பிரித்தல் வேண்டாம்’

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளில் தரம் பிரிக்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்று நீ சூன் குழுத் தொகுதியின் லூயிஸ் இங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
பாட அடிப்படையில் தரம் பிரிக்கும் முறையை ஆதரிக்கும் திரு இங், சமூகத்தினரிடையே ஒரு கலவை இருப்பதை உறுதி செய்யவும் வழக்கநிலையிலுள்ள மாணவர்கள் சந்திக்கக்கூடிய களங்கத்தைத் தடுக்கவும் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தரம் பிரிக்கும் முறை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடக்கப்பள்ளிகளில் 2008ஆம் ஆண்டு முதல் நடப்புக்கு வந்த பாட அடிப்படையிலான தரம்பிரிக்கும் முறை, உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல் படுத்தப்படவேண்டும் என்று அவர் சொன்னார்.
வழக்கநிலையில் பயிலும் மாணவர்கள் உயர்ந்த கல்வி நிலையில் பாடங்களைப் பயில முடியும். 
இவ்வாறு பாட அடிப்படை யிலான தரம் பிரிக்கும் முறை சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப் பட்டது.
இருப்பினும் ‘பிஎஸ்எல்இ’ முடி வுகளின் அடிப்படையில் இன்னமும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பிரிக்கப்படுகின்றனர். இது மாணவர்களின் வெவ்வேறு கற்றல் தேவைகளுக்கும் வேகத்திற்கும் ஏற்ப அமையும் என்றாலும் இந்தப் பிரிக்கும் முறை வெறும் கல்வி சார்ந்த முடிவுகளை ஒட்டியதே.
தேர்வு முடிவுகளின் அடிப் படையில் செய்யப்படும் இப்பிரிவினையால் வழக்கநிலையில் பயிலும் மாணவர்கள் நாளடைவில் விரைவுநிலை மாணவர்களைவிட குறைந்த சமூகப் பொருளியல் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.