இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் (https://eregister.mfa.gov.sg) தங்களது விவரங்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
"இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றில் தற்போது இருக்கும் சிங்கப்பூரர்கள் தங்களது சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய ஆன அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்," என்று வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.
உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் புதுடெல்லியிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகத்தை +91-11-4600-0800 மற்றும் +91-98102-03595 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கலாம் அல்லது singhc_del@mfa.sg மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
பாகிஸ்தானில் சிங்கப்பூர் கௌரவத் துணைத் தூதரை (Singapore Honorary Consulate-General) +92-21-3568-6419 மற்றும் +92-21-3568-5308 எண்களில் அழைக்கலாம் அல்லது singaporecg@cyber.net.pk. என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்புகொள்ளலாம்.
24 மணி நேரமும் இயங்கும் வெளியுறவு அமைச்சின் அலுவலகத்துடன் +65-6379-8800 மற்றும் +65-6379-8855 தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

