விவியன்: அறிவார்ந்த தேசம் தொடர்பான சேவைகள் சோதனைக்கு விடப்படும்

திறந்தவெளி வாகன நிறுத்து மிடங்களைக் கண்டுபிடிக்க ஓட்டு நர்களுக்கு விரைவில் எளிதாக இருக்கும். செல்லவேண்டிய இடத் தைச் சென்றடைவதற்கு முன்னதா கவே, புதிய மின்னிலக்கச் சேவை யின் மூலம் காலியாக உள்ள வாகன நிறுத்துமிடங்களைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள முடி யும்.
அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்த பல் வேறு புதிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
“காலியாக இருக்கும் வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக் கையைத் தெரிவிக்க இவ்வாண்டு அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு, நகர மறுசீரமைப்பு ஆணையம், நகராட்சி சேவைகள் அலுவலகம் ஆகியன அறிவார்ந்த உணர்கருவிகளைச் சோதித்துப் பார்க்கும்,” என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு ஜூன் மாத இறு திக்குள் இந்தப் புதிய வாகன நிறுத்துமிடச் சேவைக்கான சோதனை தொடங்கும் என்று டாக்டர் விவியனின் பார்வைக்குக் கீழ் இயங்கும் அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்கக் குழு கூறியது. 
தெலுக் ஆயர் ஸ்திரீட், டெம் பிள் ஸ்திரீட்டில் உள்ள கார் நிறுத் துமிடங்களில் இந்தச் சோதனை இடம்பெறும்.