தொகுதி எல்லை வரையறை குழு அறிவிப்பு

தேவையற்ற ஊடக கவனம், பொதுமக்களிடம் இருந்து நெருக்குதல் இவற்றிலிருந்து விடுபட்டு தொகுதி எல்லை வரையறைக் குழு தனது வேலையில் கவனம் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
தொகுதி எல்லை வரையறைக் குழு அமைக்கப்படுவது குறித்து அரசாங்கம் ஏன் வழக்கமான நடைமுறையாக அறிவிப்பதில்லை என்று பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த அல்ஜுனிட் குழுத் தொகுதியின் பிரித்தம் சிங் எழுப்பிய கேள்விக்கு திரு நான் பதிலளித்தார். 
“தேர்தல் குறித்த ஊகம் கிளம்பும் ஒவ்வொரு சமயமும் நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் இந்தக் கேள்வியை எழுப்புவது நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாது அது கிட்டத்தட்ட நாடாளுமன்ற நடை முறையை தவறாகப் பயன்படுத்து வதற்கு ஒப்பாகும்,” என்று திரு சிங் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் வருவதற்கு பல மாதங்களுக்கு முன் இந்தத் தொகுதி எல்லை வரையறைக் குழு அமைக்கப்படும். ஆனால், இதுபற்றி உடனடியாக பொது அறிவிப்பு வெளியிடப்படுவது இல்லை என்றும் அமைச்சர் விளக்கினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்