ஐந்து ஆண்டுகளில் அதிகமான குழந்தை பிறப்புகள்

சிங்கப்பூரின் மொத்த குழந்தை பிறப்பு விகிதத்தை மேம்படுத்த கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் குறிப் பிடத்தக்கவை என்றும் அவை பல னளிக்க இன்னும் அதிக காலம் பிடிக்கலாம் என்றும் மக்கள் தொகை விவகாரங்களை மேற் பார்வையிடும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள் ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தை பிறப்பு சராசரி விகிதம் அதற்கு முந்தைய ஐந்து ஆண்டு களின் விகிதத்தைக் காட்டிலும் அதிகம் என்றும் திருமணங்களின் எண்ணிக்கையும் அண்மை கால மாக உயர்ந்துள்ளது என்றும் திருவாட்டி டியோ நேற்று நாடா ளுமன்றத்தில் விளக்கினார்.

“திருமணங்களின் எண்ணிக் கை உயர்ந்துள்ளதால், அதன் மூலம் குழந்தைப் பிறப்புகளும் அதிகரிக்கலாம் என்று நம்பிக்கை யுடன் காத்திருப்போம்,” என்று அவர் மேலும் சொன்னார்.
2014ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 33,000 சிங்கப்பூர் குழந்தைகள் பிறந்தன.
அதற்கு முந்திய இரு ஐந்து ஆண்டு காலத்துடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை ஓராண்டுக்கு முறையே 31,400 மற்றும் 32,000 என்றும் அமைச்சர் சுட்டினார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்