சொந்தக் குடும்பத்தினரை மோசடி செய்தவருக்குச் சிறை

சொந்தக் குடும்பத்தினரை மோசடி செய்தவருக்குச் சிறை

1 mins read
1691fa80-76af-458d-8243-6892c35bc949
-

சொத்து முகவராகப் பணியாற்றிய ஓர் ஆடவர், பல்வேறு வழிகளைக் கையாண்டு தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறித்தார்.

'ஹட்டன்ஸ் ஏ‌ஷியா' சொத்து விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்த ஜோ டான் கியோ ஹியென், வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வாங்கிய பின்னர் மலேசியாவுக்கு ஓட்டம்பிடித்தார். அங்கு தான் கடத்தப்பட்டதாகத் தனது குடும்பத்தினரிடம் பொய்யுரைத்து அவர்களிடமிருந்து 26,000 வெள்ளியைப் பெற்றார்.

மொத்தம் 88,200 வெள்ளியை அவர் மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

41 வயது டானுக்கு ஓர் ஆண்டு பதினொரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.