வெளிநாடுகளின் குறுக்கீடுகளைச் சமாளிக்க அமைச்சர் கா.சண்முகம் உறுதி

சிங்கப்பூரின் உள்நாட்டு அரசிய லிலும் சமய நல்லிணக்க அச் சுறுத்தல் தொடர்பிலும் அந்நிய நாடுகளின் குறுக்கீடுகளைச் சமாளிக்கும் வகையில் சட்டங் கள் வலுவாக்கப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் குறுக்கீடு கள் குறித்த தாக்கத்தை அரசாங் கம் அறிந்துள்ளது என்றும் அது ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் திரு சண்முகம் கூறி னார்.
நாடுகளுக்கு இடையே பூசல் அல்லது பதற்றம் நிலவும் சூழ லில் அந்நாடுகளின் உறுதியைக் குலைக்க வெறுப்புணர்வுப் பிரசா ரங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன என்றும் பல நாடுகளில் ஜனநாயகத்தை, தேர்தல்களைக் கீழறுக்க அந்நிய சக்திகள் முயற்சி மேற்கொண்டன என்றும் அமைச்சர் சண்முகம் சொன்னார். அம்முயற்சிகள் நாட்டைப் பிளவு படுத்தி, அதன் சமுதாயக் கட்ட மைப்பை அறுத்துவிடக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உள்துறை அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு சண்முகம் இவ்வாறு பேசினார்.