‘சாஸ்’ சலுகை விவரங்கள் விரைவில் இடம்பெறலாம்

சமூக சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) பலனடைபவர்கள்,  ஒவ் வொரு முறையும் சாஸ் அட்டையை மருத்துவ அல்லது பல்மருத்துவ நிலையங்களில் பயன்படுத்தும் போது அவர்களுக்குக் கிடைக்கும் மானியத் தொகையைத் தெரி விப்பது குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சு ஆராயவுள்ளது.
மருத்துவ நிலையங்களில் இருக்கும்போது அரசாங்கத்தி லிருந்து தங்களுக்குக் கிடைக்கும் மானியத்தின் அளவுகுறித்து நோயாளிகளுக்குத் தெரியப்படுத் தினால், அவர்களால் கணக்கு களைச் சரிபார்க்க முடியுமா என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சினா சியூ லியு நேற்று நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அவருக்கு பதிலளித்த சுகாதாரத் துணையமைச்சர் எட்வின் டோங், எதிர்கால கட்ட மைப்பு மேம்பாட்டின்போது இது பற்றி ஆராய நாம் திட்டமிட்டுள் ளோம் என்று கூறினார்.
ஏமாற்றுக் குற்றங்கள் இருந் தால் சாஸ் திட்டத்திலிருந்து மருத் துவ, பல்மருத்துவ நிலையங்கள் முன்னர் நீக்கப்பட்டுள்ளன. 

2017 முதல் சாஸ் அட்டையை பயன்படுத்தும் நோயாளிகளுக்கு தனித்தனி விவரங்களுடன் கட்டணம் வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டது. 
ஆனால், எல்லா மருத்துவ நிலையங்களும் அவ்வாறு செய்வ தில்லை. 
கணினி தவற்றினால், அண்மையில் சிலருக்கு தவறான மானியம் கிடைத்தது பற்றி டாக்டர் சியா, நியமன நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் தெசேரா இருவரும் கேள்வி எழுப்பினர். 
தவறாகக் கொடுக்கப்பட்ட மானியத் தொகையில் எவ்வளவு தொகையை மீட்க முடியும் என்று திரு வால்டர் தெசேரா கேட்டார். 
அதற்கு, மதிப்பிடப்பட்ட $2 மில்லியன் இழப்பை கணினி கட்டமைப்பு சேவை வழங்கும் குத்தகையாளரே ஏற்க வேண்டும் என்று துணைய மைச்சர் திரு டோங் பதில் கூறினார். 
கணினி கட்டமைப்பு மாற்றப் படும்போது தவறான மென்பொருள் பதிவேற்றம்செய்யப்பட்டதால் தவறு நிகழ்ந்ததாக அவர் விளக்கினார். 
இனிமேல், ஒவ்வொரு முக்கிய கட்டமைப்பு மாற்றம் இடம்பெறும் போதெல்லாம், அதுகுறித்த சுதந் திரமான மறுஆய்வு செய்வது உட்பட எந்த அம்சங்களை வலுப் படுத்தலாம் என்பது குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு செய்து வரும்.