ராணுவ பயிற்சிகளின்போது பாதுகாப்பு கண்காணிப்பு

பாதுகாப்பு விதிகளுக்கு இணங்கி நடக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்த, அதிக அபாயமுள்ள, திடல் பயிற்சிகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படு வதை சிங்கப்பூர் ராணுவம் கட்டாயமாக்க உள்ளது. 
வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, தலைமை ஆய்வாளர் அலுவலகம் கூடுதலாக இன்னும் ஓர் அடுக்கு பாதுகாப்பு தணிக் கைகளையும் சோதனைகளையும் மேற்கொள்ளும்.
“தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளும் பயிற்சியின் போது பாதுகாப்புக்கு உச்ச முன்னுரிமை அளித்து வருகிறது என்பதை உறுதியான நடவடிக்கைகள் மூலம் சிங்கப்பூரர் ளிடம் மறு உறுதி செய்ய நாங்கள் விரும்பு கிறோம்,” என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்தார்.

அதே நேரத்தில், சேவை ஆய் வாளர் அலுவலகங்கள் ஏற் கெனவே மேற்கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகளையே தாங்களும் பின்பற்றமாட்டோம் என்று சிங்கப்பூர் ஆயுதப்படையின் புதிய தலைமை ஆய்வாளரான பிரிகேடியர் ஜெனரல் டான் சீ வீ குறிப்பிட்டார்.
மாறாக, ஆய்வாளர் அலுவலக அமைப்பை வலுப்படுத்தும் வித மாக பலவீனமான அம்சங்களைத் தலைமை ஆய்வாளர் அலுவலகம் ஆராயும் என்றும் கொள்கை களையும் அவற்றை அமல்படுத்து வதிலும் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என ஆராயப்படும் என்றும் திரு டான் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி கார்ப்பரல் அலோய்‌ஷியஸ் பாங் தேசிய சேவைப் பயிற்சியின்போது காய மடைந்து, பின் உயிரிழந்ததை அடுத்து சிங்கப்பூர் ஆயுதப்படை பயிற்சிப் பாதுகாப்பு சிங்கப்பூரர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள் ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா