போலி தகவல் குறித்து விழிப்புணர்வு

நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பில் சிங்கப்பூர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. பிற நாடுகள் மக்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் போலி தகவல்கள் வழி இயக்கங்களில் இறங்கலாம் என்பது குறித்து நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அபாஸ் அலி முகம்மது இர்ஷாத் கேள்வி எழுப்பியதற்கு நேற்று வெளியுறவு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டான் வு மெங் இவ்வாறு பதிலளித்தார். மக்கள் அரசாங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் குலைக்கும் ஆற்றல் இதுபோன்ற போலி தகவல் இயக்கங்களுக்கு உண்டு என்றாலும் மாணவர்கள் முதற்கொண்டு அனைத்து பிரிவு சிங்கப்பூரர்களுக்கும் போலி தகவல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.