நோயாளியின் ஒப்புதலைப் பெறும் நடைமுறை மறுஆய்வு

குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ள நோயாளி ஒருவர் ஒப்புதல் அளிக்குமுன் அவருக்கு என்னென்ன தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைச் சுகாதார அமைச்சு முழுமையாக மறுஆய்வு செய்ய உள்ளது என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு பிரத்தியேக பணிக்குழு அமைக்கப் படவுள்ளது.
தங்களது நோயாளிகளைப் பராமரிக்கும் கடமை தொடர்பில் நேற்று 350 மருத்துவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச் சியில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
நோயாளி ஒருவருக்குக் குறிப் பிட்ட சிகிச்சையை மேற்கொள்ளும் முன் ‘இன்ஃபார்ம்டு கன்சென்ட்’ எனும் ஒப்புதலைப் பெறவேண்டும். அதாவது, பல்வேறு சிகிச்சை  தெரிவுகளின் பலன்கள், அபாயங் கள் குறித்து நோயாளிக்குத் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்த மறுஆய்வு தொடர்பாக அரசாங்க, தனியார் மருத்துவர் களைச் சுகாதார அமைச்சு கலந்து ஆலோசிக்கும்.
அதே நேரத்தில், நோயாளியின் பாதுகாப்பு தொடர்பில் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்கப்படாது என்பதை அமைச்சர் டோங் தெளி வாகக் கூறிவிட்டார்.
“நோயாளியின் நலனே மிக முக்கியம். மருத்துவர்கள் தங்க ளைத் தற்காத்துக்கொள்ளும்படி யான மருத்துவ நடைமுறையை நாங்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தில், எல்லா விவரங்களை யும் அறிந்தபின் நோயாளியின் ஒப்புதலைப் பெறும் நடைமுறை  மருத்துவர், நோயாளி என இரு தரப்புக்கும் உதவியாக இருக்கும்,” என்றார் திரு டோங்.2019-03-03 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி