புற்றுநோயை எதிர்த்துப் போராட ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சல் ஓட்டத்தில் 7,000க்கும் அதிக மானோர் பங்கேற்று இந்த இயக் கத்திற்காக $1 மில்லியனுக் கும் அதிகமான நிதியைத் திரட் டினர். மூன்றாவது ஆண்டாக நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தின் 'டாக்மெட் ரிலே ஃபார் லைஃப்' என்ற அஞ்சல் ஓட்டம் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. ஆக நீளமான தூரத்தை (14,849.2 கிலோ மீட்டர்) குழு ஓட்டக்காரர்கள் ஆறு மணி நேரத்தில் ஓடி இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். இந்த 100 கிலோ மீட்டர் தூர அஞ்சல் ஓட்டத்தில் மொத்தம் 208 குழுக்கள் பங்கேற்றன. கடந்த ஆண்டின் பங்கேற்பு எண்ணிக் கையைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும். புற்றுநோய் குறித்தும் இந்நோய் ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத் தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஊக்கமளிக்கவும் நிதி திரட்டுவதற்காக இந்த ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை இந்த அஞ்சல் ஓட்டத்தைத் தொடங்கி வைத்த அதிபர் ஹலிமா யாக்கோப், புற்றுநோயிலிருந்து மீண்டவர்களு டன் ஓட்டத்தின் ஒரு பகுதியில் இணைந்தார். நேற்று ஓட்டத்தை முடித்து வைத்துச் சிறப்பித்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ புற்றுநோய் குணமானவர்களுடன் சேர்ந்து அஞ்சல் ஓட்டத்தின் கடைசி பகுதி யில் ஓடினார். ஓட்டத்தில் பங்கேற்ற வர்களில் புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களும் புற்று நோயாளிகளுக்கு சேவை அளித்து வருபவர்களும் அடங்குவர்.
புற்றுநோயை எதிர்த்துப் போராட அஞ்சல் ஓட்டம் மூலம் $1 மில்லியன் நிதி திரட்டு
1 mins read
அஞ்சல் ஓட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றோருடன் (இடமிருந்து 2வது) கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: போர்ட்ரேட் ஃப்ரம் தி ஹார்ட் -

