‘ஏஐஏ’ காப்புறுதி நிறுவனத்தில் ரகசிய இணையத் தகவல்கள் வெளியாகின

காப்புறுதி நிறுவனமான ‘ஏஐஏ’ வினால் ரகசியமாக காக்கப்பட்டி ருக்க வேண்டிய இணைய வாசல் ஒன்றை எல்லாரும் பார்க்க முடிந்ததாகக் கண்டறியப்பட்டது. 
அதனையடுத்து அந்நிறுவனம் அதன் கட்டமைப்புகள் அனைத் தையும் பரிசோதித்து வருகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழு கடந்த புதன்கிழமை அந்த இணையவாசலுக்குச் சென்ற போது அதில் 225 ‘ஏஐஏ’ இன்னாள், முன்னாள் முகவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப் பினர்களின் தனிப்பட்ட விவரங் களைப் பார்க்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது பெயர், அடையாள எண், பாலினம், பிறந்த தேதி, தொடர்பு எண் உள்ளிட்டவை அந்த விவரங்களில் அடங்கும்.
இந்தச் சம்பவம் பற்றி தனக்கு தெரியும் எனக் கூறிய தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம், இது குறித்து தான் விசாரணை மேற்கொள்வதாகச் சொன்னது.
இந்தத் தகவல் கசிவால் பாதிக்கப்பட்டோரைத் தொடர்பு கொண்டு அது குறித்து ஏஐஏ தெரிவித்து வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.