பிறந்த குழந்தையைக் கைவிட்ட சிங்கப்பூர் தம்பதியிடம் தைவான் விசாரணை

பிறந்த குழந்தையைக் கைவிட்ட சிங்கப்பூர் தம்பதியிடம் தைவான் விசாரணை

1 mins read

புதிதாகப் பிறந்த பெண் குழந் தையின் உடலை மறுசுழற்சி தொட்டியில் வீசியதாக சந்தே கத்தின் பேரில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியை தைவான் அதி காரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தைவானின் குற்றவியல் புல னாய்வுப் பிரிவு, சிங்கப்பூர் அதி காரிகளின் உதவியை நாடியுள் ளதை சிங்கப்பூர் போலிஸ் நேற்று உறுதிப்படுத்தியது. தைவானில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை நிகழ்ந்த இச்சம் பவத்தில் குப்பை பை ஒன்றில் அக்குழந்தையின் உடல் சுற்றப் பட்டுக் கிடந்ததை மறுசுழற்சி நிறு வனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கண்டறிந்தார். அந்நாட்டுத் தலைநகர் தைபே யில் அக்குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அதன் உடல் வீசப் பட்டது என உள்ளூர் போலிஸ் சந்தேகிப்பதாக தைவான் ஊடகம் ஒன்று குறிப்பிட்டது. உடலில் நச்சுக்கொடியும் தொப்புள் கொடியும் இன்னும் இணைந்திருந்த நிலையில் அந்தக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.