பணிப்பெண்ணை வதைத்த தம்பதியரின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன

பணிப்பெண்ணை வதைத்த தம்பதியரின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன

1 mins read
32853a6d-4b44-4627-9dd1-019ed1b87279
-

பணிப்பெண்ணைப் பல்வேறு முறை வதைத்த தம்பதியர் குற்றவாளிகள் என்று மாவட்ட நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 4) தீர்ப்பளித்தது.

மியன்மாரைச் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணை 43 வயது சியா யுன் லிங் பணிப்பெண்ணை எட்டு முறை வதைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சியாவின் கணவர் டே வீ கியேட், அந்தப் பணிப்பெண்ணை ஆறு முறை வதைத்ததும் உறுதி செய்யப்பட்டது.

பணிப்பெண்ணுக்குப் போதிய உணவை வழங்கத் தவறியதுடன் அவரை அரைகுறை ஆடைகளில் வேலை செய்ய அந்தத் தம்பதியர் கட்டாயப்படுத்தினர்.

மற்றொரு பணிப்பெண் ஒருவரை வதைத்ததற்காக இந்த இருவரின் மீது ஏற்கெனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய குற்றங்களுக்கான தண்டனை மார்ச் 18ஆம் தேதி விதிக்கப்படும்.