கேலாங் வட்டாரத்தில் நீச்சல் குளத்திற்குள் விழுந்த கார்

லோரோங் 27ஏ கேலாங்கில் சிம்ஸ் கிரீன் கூட்டுரிமை வீடுகளுக்கான குடியிருப்பில் சிவப்பு நிற கார், பிள்ளைகளுக்கான நீச்சல் குளம் ஒன்றுக்குள் விழுந்தது. ‘ஹோண்டா ஷட்டல்’ காரின் முற்பகுதி குளத்தின் நீரில் மூழ்கியிருந்ததைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வலம் வருகின்றன.

நீச்சல் குளத்திற்குள் விழுந்ததற்கு முன்னர் புல் தரையில் சில மீட்டர் அந்தக் கார் சென்றதாக மற்றொரு படம் காட்டுகிறது.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (மார்ச் 4) காலை 6.45 மணிக்கு நடந்ததாக வான்பாவ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. தனியார் வாடகைச் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்று குளத்திற்குள் விழுந்ததாக வான்பாவ் நாளிதழ் குறிப்பிட்டது. 

ஓட்டுநர் உதவிக்காகக் கூச்சலிட, கொண்டோமினிய வீடுகளின் காவல் அதிகாரிகள் விரைந்து அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அந்தக் கார் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டது. 

இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் 2013-லும் 2017-லும் நிகழ்ந்தன.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்