சிங்கப்பூரின் வரலாற்று ஆவணங்களை நாட வசதி

சிங்கப்பூரின் பழங்கால வரலாற்றைச் சிங்கப்பூரர்களுக்குப் புரிய வைத்து எதிர்காலத்தில் அதனைப் பிரதிபலிக்கச் செய்ய உதவுதற்காகவே இருநூறாம் ஆண்டு நிறைவு கடைப்பிடிக்கப்படுகிறது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமது அமைச்சின் மீதான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்றுப் பேசிய அவர், தேசிய நூலக வாரியம் ஆவணப் படுத்தி வைத்திருப்பவற்றை பொது மக்கள் காணலாம் என்றார். சிங்கப்பூருக்கு பிரிட்டிஷ்காரர்கள் வருகைபுரிந்தது முதலான 200 ஆண்டு கால ஆவணங்கள் அவை.

புதுப்பிப்புப் பணிகளை மேற் கொள்வதற்காகக் கடந்த 2017ஆம் ஆண்டு மூடப்பட்ட சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகக் கட்ட டம் கேனிங் ரைஸில் அடுத்த மாதம் புதுப்பொலிவுடன் திறக்கப் பட இருப்பதை திரு ஈஸ்வரன் எடுத்துக்காட்டினார்.
அந்தக் கட்டடத்தில் மேம்படுத் தப்பட்ட பல வசதிகள் இருக்கும். ஓல்ட்ஹம் தியேட்டர், வாய்மொழி வரலாற்றுப் பதிவு அரங்கம் போன்ற அந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம். மேலும், ஆசிய திரைப்பட ஆவணக் காப்பகத் திலிருந்து திரைப்படங்கள் காட்டப் படும்.

1830ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் நிகழ்வுகள் ஆவணமாக்கப்பட்டு தேசிய நூலகம், சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றிலுள்ள சில ஆவணங்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டதை அமைச்சர்கள் எஸ் ஈஸ்வரனும் லாரன்ஸ் வோங்கும் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்